Thursday, January 2, 2025

A Gratitude Poem by Ayeshathul Nooria

 ஆசானே! ஆசானே!

ஆற்றல் நிறை ஆசானே!

அறிவார்ந்த  பயிற்சியினை

ஊட்டிய நல் ஆசானே!

முன்னேற்றம் காண்பதற்கு முனைப்புக்காட்டும் ஆசானே!

முக்கனியின் சாறுபோல 

பிழிந்து தரும் ஆசானே!


உம் வகுப்பில் யாம் கற்று முன்னேற்றப் பயிற்சி பெற்ற உயரத்தில் சென்றுவிட்ட உணர்வலையில்

திளைக்கின்றேன்.

உங்கள் வகுப்பின் 

நெறிமுறையும் 

பயிற்சியளித்த அழகியலும் 

அர்ப்பணிப்பாய்

நீங்கள் தந்த அயராத 

கற்பித்தலும் எம் வாழ்வில் என்றுமே மறக்கமுடியா 

தருணங்கள்!


பெறற்கரும் பெரும் பேறு பொற்கால பாக்கியம்.நான்கு நாட்கள் எப்படித்தான் 

கரைந்ததோ யாமறியோம்!

வீட்டை மறந்தோம் 

ஊரை மறந்தோம்!

ஏன்? இந்த உலகையே 

மறந்தோம்!

உங்கள் பேச்சு 

உங்கள் வகுப்பு 

உங்கள் குழுவினரின் 

உபசரிப்பு உங்களிலேயே கட்டுண்டுகிடக்க வைத்துவிட்டது.

இது வெற்றுப் புகழல்ல.

சொல் அலங்காரமும் 

அல்ல.

இது யதார்த்தம்.

உங்களில் நான் கண்ட 

உண்மை.


உங்கள் பொறுமை;

நிதானம்;

தனித்துவம்.

சோர்வுற‌ விடாமல் வகுப்பைக் கொண்டு 

சென்ற நேர்த்தி. 

இறைவன் பெரியவன்! 

மற்ற எவராலும் இது 

சாத்தியமா ?!

வாய்ப்பில்லை 


இன்னும் நிறைய எழுத 

என்மனம் சொல்கிறது 

இறைவன் உங்களுக்கு 

வழங்கியுள்ள தனித்துவ 

சிறப்பை.

உங்கள் காலநேரம் 

விரயமாகுமோ என்றெண்ணி நிறுத்துகிறேன்.

வாழ்த்தையும்

நன்றியையும் தெரிவிக்கின்றேன்.


என்றும் பிரார்த்தனைகள் செய்யும் 

உங்கள் மாணவி,


 ஆயிஷத்துல் நூரிய்யா

கூத்தாநல்லூர்.

உங்களின் மாணவி என்பதில் பெருமிதம் கொள்கிறேன் .☺️

No comments:

Post a Comment